tamilnadu

img

மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்..... காஷ்மீரில் ராணுவ உயரதிகாரி உள்பட 4 பேர் பலி

காஷ்மீர்
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே காஷ்மீர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் அவ்வப்போது ஊடுருவித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த மாதம் 2 முறை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், வட காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக ரகசியத் தகவல் கிடைக்க அந்த பகுதியைச் சுற்றி வளைத்துப் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். 

பாதுகாப்புப் படையினரும் அதிரடி தாக்குதலில் தொடுக்க, மோதல் முற்றியது. கடும் துப்பாக்கிச் சண்டைக்கு இடையே கர்னல் மற்றும் ராணுவ உயரதிகாரி உட்பட 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். தீவிரவாதிகள் தரப்பில் உயிரிழப்பு விபரம் முழுமையாக வெளியாகவில்லை.
 

;